Pages

Thursday, September 15, 2016

அதிரையில் திமுகவினர் கொண்டாடிய அண்ணா பிறந்த நாள் விழா ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், செப். 15
பேரறிஞர் அண்ணாவின் 108 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இன்று காலை திமுக அதிரை பேரூர் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அதிராம்பட்டினம் திமுக அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டுசென்று திமுக கொடிக்கம்பங்களில் கொடியேற்றப்பட்டன. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திமுக பட்டுக்கோட்டை மேற்கு தொகுதி ஒன்றிய செயலளார் ஏனாதி பா. இராமநாதன், அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன், இணைச்செயலாளர் அன்சர்கான், பொருளாளர் கோடி முதலி, மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, மகிழங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சிவாஜி, மீனவரணி பொறுப்பாளர் கோடி நாகராஜ், அதிரை பேரூர் வார்டு கவுன்சிலர்கள் செய்யது முஹம்மது, பசூல்கான் மற்றும் அதிரை பேரூர் வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், முத்துராமன், இப்ராஹீம், அப்துல் அஜீஸ், பகுருதீன், இளைஞர் அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...