Pages

Tuesday, September 13, 2016

லாரி மோதி அதிராம்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் காயம் !

பட்டுக்கோட்டை பெரிய கடைவீதியில் திங்கள்கிழமை லாரி மோதியதில் சிறப்பு உதவி ஆய்வாளரின் கால் முறிந்தது.

பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (52). அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். திங்கள்கிழமை காலை இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய தலைமைக் காவலர் ரவிச்சந்திரனை (50) அழைத்துக் கொண்டு பெரிய கடைவீதிக்குச் சென்றார். சொந்த வேலையாக சென்றதால் இருவரும் சீருடை அணியவில்லை. பெரிய கடை வீதி மண்டகப்படி அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்தின் மீது
லாரி மோதியது. இதில் பன்னீர்செல்வத்தின் இடதுகால் முறிந்தது. ரவிச்சந்திரன் லேசான காயமடைந்தார்.

உடனடியாக இருவரும் பட்டுக்கோட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...