Pages

Monday, September 5, 2016

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிநவீன ஆவின் பாலகம் திறப்பு !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில்  அதி நவீன ஆவின் பாலகத்தினை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார்.  மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார்.

அதி நவீன ஆவின் பாலகத்தில் ஆவின் தயாரிக்கும் பொருட்களான பால் பவுடர், பால்கோவா, நறுமணம் ஊட்டப்பட்ட பால், பாதாம் பவுடர், ஐஸ்கிரீம் முதலிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வருவாய்த்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி நியமன ஆணையினை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.கோவிந்தராசு (பேராவூரணி), மாண்புமிகு மேயர் திருமதி.சாவித்திரிகோபால், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் சதய விழாக்குழு தலைவர் எம்.ரெங்கசாமி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.ராம்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சீனிவாசன், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.ஆர்.காந்தி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.துரை.திருஞானம், மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் திரு.பண்டரிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.மோகன், நிலவள வங்கித் தலைவர் திரு.துரை வீரணன், நிக்சல்சன் கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.அறிவுடைநம்பி, துணைத் தலைவர் திரு.புண்ணியமூர்த்தி, ஒன்றிய துணைத்தலைவர் திரு.சாமிவேல், 51வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் திரு.ஜெய்னூலப்தீன், (பொது), திரு.கணேசன் (கணக்கு),  வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம்,  ஆவின் பொது மேலாளர் திரு.வை.காமராஜ், துணைத் தலைவர் திரு.எஸ்.பாலாஜி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.கிருஷ்ணகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சி) திரு. கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.சொக்கலிங்கம் (வேளாண்மை), மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ராஜசேகரன், செயற்பொறியாளர் திரு.சக்திமுருகன் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...