Pages

Tuesday, September 6, 2016

அதிராம்பட்டினத்தை தனி வட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்!

அதிராம்பட்டினம், செப். 06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு அதிராம்பட்டினம் பேரூர் செயலர் காளிதாஸ் தலைமை வகித்தார். துணைச்செயலர் ஹசன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி. பக்கிரிசாமி, ஒன்றியச் செயலர் ஏ.எம். மார்க்ஸ் ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்தில், அதிராம்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 25 பெண்கள் உள்பட 38 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
தொடக்கத்தில் துணைச்செயலர் பன்னீர்செல்வம் வரவேற்றார். நிறைவில், இளைஞர் மன்றச் செயலர் ஹாஜா முகைதீன் நன்றி கூறினார்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...