Pages

Sunday, September 4, 2016

அதிராம்பட்டினம் அருகே இறந்த விவசாயி கண்கள் தானம் !

அதிராம்பட்டினம், செப். 04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஏ.ஆர் பாலசுப்பிரமணியன் (வயது 64). விவசாயி. நேற்று சனிக்கிழமை இயற்கை எய்தினார். இதை அடுத்து இவரது மகன் ராஜ்குமார், மகள் சாந்தி ஆகியோர் தனது தந்தையின் விருப்பப்படி கண்களை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்திற்கு தானம் செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் இர்பான் சேக், செயலர் முத்துகிருஷ்ணன், பொருளர் சாகுல் ஹமீது, லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் மேஜர் முனைவர் கணபதி, மண்டல செயலர் பேராசிரியர் செய்யது அகமது கபீர், சாகுல் ஹமீது, சாரா அகமது, உறுப்பினர் அதிரை மைதீன் ஆகியோர் விரைந்து சென்று டாக்டர் கல்யாண சுந்தரம் உதவியோடு இறந்த பாலசுப்பிரமணியனின் இரண்டு கண்களை தானமாக பெற்று கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கண்களை தானமாக வழங்கிய பாலசுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நன்றி கூறினார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...