Pages

Saturday, September 17, 2016

தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமாகா கண்டன ஆர்ப்பாட்டம் ! ( படங்கள் )

தமிழகத்திற்குரிய தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தண்ணீரை பெற்றுதர நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு த.மா.கா. சார்பில் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜி.ஆர் மூப்பனார் முன்னிலை வகித்தார்.

கண்டன ஆர்பாட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் பேசுகையில் கூறியதாவது:-
தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து பின்னர் அனைத்து கட்சி குழுவை பிரதமரிடம் அழைத்து சென்று டெல்டாவின் உண்மை நிலவரத்தை தெரிவித்து காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் தமிழர்களின் பொருட்கள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தபட்டுள்ளன. அதற்கான நஷ்டஈடு தொகையை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். கர்நாடகா அரசிடமிருந்து அதனை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்குவதில் பாகுபாடு இருக்கக்கூடாது. ஆனால், இடுபொருட்கள் வழங்குவதில் அரசியல் குறுக்கீடு உள்ளது. இதில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மதித்து நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினையில் மன்னார்குடியை சேர்ந்த இளைஞர் தீக்குளித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்கத்தில் தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் என்.ஆர் ரெங்கராஜன் வரவேற்றார். முடிவில் தஞ்சை மாநகர தலைவர் வல்லம் குணா நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமாகா மாவட்ட செயலர் அதிரை மைதீன், பட்டுக்கோட்டை நகர தலைவர் ஏ.கே குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலு, அதிரை பேரூர் துணை தலைவர் கண்ணன், வீரப்பன் உள்ளிட்ட தமாகாவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...