Pages

Saturday, September 3, 2016

துபாயில் குர்பானி பிராணிகளை அறுக்கும் அறுவைக்கூடங்கள் தயார்!

அதிரை நியூஸ்:
துபாய், செப். 03
எதிர்வரும் செப். 12 ஆம் தேதி ஹஜ்ஜூப் பெருநாள் எனும் தியாகத் திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் துபையிலுள்ள 9 பிராணி அறுப்பு மையங்களும் (Abbatoirs) நவீன வசதிகளுடன் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

துபை மாநகராட்சியின் இந்த மையங்களில் மணிக்கு சுமார் 550 குர்பானி பிராணிகளை அறுத்து சுத்தம் செய்து தரப்படும். மேலும் அல் கிஸஸ் பகுதியில் திறக்கப்பட்டுள்ள அறுவை கூடத்தில் மணிக்கு 330 குர்பானி பிராணிகளை அறுப்பதுடன் 24 மணிநேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துபை மாநகராட்சியால் நடத்தப்படும் இந்த அறுவை கூடங்களில் மட்டுமே குர்பானி பிராணிகளை அறுப்பதற்கு அனுமதியுள்ளது. மேலும் இங்கு ஒப்படைக்கப்படும் பிராணிகள் அனைத்தும் கால்நடை மருத்துவர்களின் சோதனைகளுக்குப் பிறகே அறுக்கப்படும்.

ஒப்படைக்கப்படும் பிராணிகள் அடையாளமிடப்பட்டு அறுத்து சுத்தம் செய்யப்பட்டு இறைச்சிகள் மட்டும் அதனதன் உரிமையாளர்களிடம் வழங்கப்படும், இதற்கென கட்டணம் செலுத்த வேண்டும்.

காலை நேரங்களில் பொதுமக்களின் குர்பானி பிராணிகளையும் மாலை நேரங்களில் தர்ம ஸ்தாபனங்களின் பிராணிகளை அறுக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: சந்து பொந்துகளுக்குள் வைத்து பெங்காளிகளும் பாகிஸ்தானியர்களும் வேறு சிலரும் அறுப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதையும் அறிந்து கொள்க!

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...