Pages

Monday, September 5, 2016

இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி தமிழ் ஆசிரியருக்கு 'அறிவுச்சுடர்' விருது !

அதிராம்பட்டினம், செப் 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் பார்த்த சாரதி அவர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டன.

லயன்ஸ் சங்கம் ஆசிரியர் தின விருது வழங்கும் விழா அண்மையில் தஞ்சையில் நடைபெற்றது. விழாவிற்கு லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆளுநர் டாக்டர் பி. வெங்கட்ராமன் முன்னிலையில் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பட்டிமன்ற நடுவர் முனைவர் கு. ஞானசம்மந்தன் தமிழ் ஆசிரியர் பார்த்த சாரதியின் ஆசிரியர் சேவையைப் பாராட்டி 'அறிவுச்சுடர்' விருது வழங்கி கெளரவித்தார்.

இந்த விழாவில்  லயன்ஸ் சங்க மாவட்ட முதல் துணை ஆளுநர் டாக்டர் எஸ். வீரபாண்டியன், லயன்ஸ் சங்க கூட்டு மாவட்ட துணைத்தலைவர் எஸ் வேதநாயகம், மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் எச். சேக்தாவூது ஆகியோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாட்டினை தஞ்சாவூர் என்சியண்ட் சிட்டி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

விழாவில் கலந்துகொண்ட லயன்ஸ் சங்க மண்டல செயலர் பேராசிரியர் செய்யது அகமது கபீர், மாவட்டத் தலைவர்கள் சாரா அகமது, சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் இர்பான் சேக், உறுப்பினர் இத்ரீஸ் அகமது ஆகியோர் விருது பெற்ற தமிழ் ஆசிரியர் பார்த்த சாரதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

அண்மையில் சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகள் தஞ்சையில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டன. இதில் ஜூனியர் ரெட் கிராஸ் சேவை அமைப்பின் மூலம் ஆற்றிவரும் சிறப்பான சேவைக்காக  இவருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...