Pages

Saturday, September 17, 2016

நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்! ஓர் அமெரிக்க அலப்பறை!!

அதிரை நியூஸ்:
அமெரிக்கா, செப்.17
வருத்தப்படாதவர்கள் சங்கம் எல்லாம் வாலிபர்களுக்கு தான் சரியா வரும் சம்சாரிக்கு எல்லாம் சரியா வராது போல. நம்ம நாடா இருந்த சன்யாசம், வனவாசம் போகலாம் அட்லீஸ்ட் ஒரு ஆசிரமமாவது ஆரம்பிக்கலாம் ஆனா அமெரிக்காகாரன் எங்க போவான்?

அமெரிக்காவின் கன்சாஸ் நகரைச் சேர்ந்த 70 வயது லாரன்ஸ் ஜான் ரிப்பிள் என்ற ஆசாமி தான் சாமியாரா போக வழி தெரியாமல் ஜெயிலுக்கு போனாருங்க! பெரியவருக்கு பொண்டாட்டியோட ஒயாத சண்டை, வெறுத்துப் போனவரு உன் கூட வாழ்றதுக்கு பதிலா நான் ஜெயிலுக்கு போறேன்னு கிளம்பிட்டாருங்க.

நேரா கன்சாஸ் நகர பிரதர்ஹூட் பேங்க் அண்ட் டிரஸ்ட் பிரேஞ்ச் என்ற கிளைக்கு போனவரு கேஷியரை மிரட்டும் தொனியில் 'நான் பேங்கை கொள்ளையடிக்க வந்திருக்கேன் (பிசாத்து காசு) 3 ஆயிரம் டாலரை எடுத்து வை' என்று ஒரு துண்டு சீட்டை நீட்டியவுடன் அந்த உத்தம கேஷியர் டபக்குன்னு எடுத்துக் கொடுத்துட்டு அடுத்த வேலைய பாக்கப் போயிட்டாரு, பெரிய களேபரத்தை எதிர்பார்த்து வந்த நம்ம லாரன்ஸூ இங்கேயும் வெறுத்துட்டாரு!

அப்புறம் அங்கிருந்த பேங்க் காவலாளியிடம் போய் தான் பேங்கை கொள்ளையடித்த விபரத்தை சொல்லி சரணடைந்து என்னைய கைது பண்ணுங்கோன்னு அங்கேயே உக்காந்துட்டாரு, ஒருவழியா போலீஸ் வந்து அள்ளிக் கொண்டு போய் விசாரிக்க, ஜெயிலுக்கு வாலண்டியரா வர பொண்டாட்டி மேல் உள்ள கோபமே காரணம் எனத் தெரிய வர, மனநல ஆலோசணை மையத்துக்கு அனுப்பி புத்திமதி சொல்லி மறுபடியும் வீட்டுக்கே அனுப்பிட்டாங்களாம், என்னா பாடுபட்டும் ஜெயிலுக்கு மட்டும் போக முடியல, என்ன வாழ்க்கைட இதுன்னு நொந்து போயிருப்பாருல!

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...