Pages

Friday, September 16, 2016

அதிரை இளைஞருக்கு பசுமை தேசம் - கலாம் விருது !

அதிராம்பட்டினம், செப். 16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் ஏ. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் 'மணிச்சுடர்' இதழின் அதிராம்பட்டினம் பகுதி நிருபராகவும், 'அதிரை நியூஸ்' இணையதளத்தின் நேர்காணல் நடத்துனராகவும் இருந்து வருகிறார்.

கடந்த 9 ஆண்டுகளாக ஆர்வத்துடன் தானாக முன்வந்து இரத்த தானம் செய்து வருகிறார். இதுவரையில் 30 தடவை இரத்தம் வழங்கி மொத்தம் 10.50 லிட்டர் இரத்தம் வழங்கி சாதனை புரிந்துள்ளார்.

இந்நிலையில் பசுமை தேசம் அறக்கட்டளை சார்பில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் பெருமகளுர் பிடாரி அம்மன் திருமண மகாலில் பசுமை தேசம் கலாம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தலைமையேற்ற மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரன், ஏ.பி.ஜே அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேசன் நிர்வாகத் தலைவர் ஏ.பி.ஜே.எம்.ஜே சேக் தாவூது கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றிய 100 சாதனையாளர்களுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் சிறந்த இரத்த தான சேவைக்காக அதிராம்பட்டினம் சாகுல் ஹமீது அவர்களுக்கு ' பசுமை தேசம் கலாம் 2016 - விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அருகில் பசுமை தேசம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் சித. சதீஸ் குமார் உள்ளார்.
 
 
 
 

2 comments:

  1. வாழ்த்துக்கள் சகோ.ஷஹுல்ஹமிட்.பணி மென்மேலும் தொடர அல்லாஹ் உங்களுக்கு நிறைந்த ஆயுளையும் உடல்நலத்தையும் தருவானாக!ஆமீன்.

    ReplyDelete
  2. நல்வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...