Pages

Wednesday, September 7, 2016

எமிரேட்ஸ் விமான விபத்துக்கான காரணம்: வெளியான தகவல் !

திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானத்தின் விபத்துக்கு விமானம் இறங்கும் போது சக்கரங்கள் சரியாக இயங்காமல் போனதே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி அன்று 288 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் எமிரேட்சின் போயிங் விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது.

துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது திடீரென விமானம் ஓடுதளத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தின் பின் பகுதி தீப்பிடித்து எரிந்தது.

இந்நிலையில் அவசர வழிகள் திறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் மின்னல் வேகத்தில் வெளியேற்றப்பட்டனர். இதில் தீயை அணைத்த வீரர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விமான விபத்து தொடர்பான முதல் கட்ட விசாரணை அறிக்கையில், விமானம் தரையிறங்கும் போது வால்பகுதியில் காற்று பலமாக தாக்கியதால் ஓடுதளத்தில் நேராக இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

முதன்முறை தரையிறங்க முயற்சிக்கப்பட்ட போது முன் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் 85 அடி தூரம் விமானத்தை அந்தரத்திலேயே தரையிறக்காமல் வைத்து இருந்துள்ளனர்.

6 வினாடிகள் கழித்து முன்சக்கரம் மீண்டும் விமானத்தின் உள்ளே சென்றுவிட்டது. இந்த நேரத்தில் விமானம் வேகத்தை இழந்ததால் விமானிகள் இரு ஜெட் என்ஜின்களையும் இயக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் அதற்குள் விமானம் ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போது முன்சக்கரங்கள் இருந்த பகுதியை திறக்க முடியாததால் விமானத்தின் முன்பகுதி ஓடுதளத்தில் மோதி, ஜெட் என்ஜின்கள் காரணமாக தீப்பிடித்தது என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...