Pages

Monday, September 12, 2016

காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களின் நெஞ்சை நெகிழ வைத்த சந்திப்பு ( படங்கள் )

அதிராம்பட்டினம், செப்.12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பாக 1983-1986 ஆம் ஆண்டு பேட்ஜில் கணிதம் பாடப்பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 பேர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்ட நெஞ்சம் நெகிழும் சந்திப்பு நிகழ்ச்சி ஞாற்றுக்கிழமை காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை உரை நிகழ்த்தினார். கல்லூரி கணித துறை தலைவர் முனைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.ஏ முகமது அப்துல் காதர், கல்லூரி முன்னாள் ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் பர்கத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.

தொடக்கத்தில் முன்னாள் மாணவர் முனைவர் சேக் அப்துல் காதர் வரவேற்றார். முன்னாள் மாணவர் ரவீச்சந்திரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முடிவில் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கல்லூரி பேராசிரியர்கள் டி. லெனின், என். வீர பாண்டியன், எஸ். ரவீந்திரன், ஓ. சாதிக், ஏ. ஹாஜா அப்துல் காதர் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஆய்வக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களை பற்றிய அறிமுகத்தையும், தற்போது செய்துவரும் பணிகள் பற்றியும், கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகள் குறித்து பேசி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.

33 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் அசைபோட்டனர். இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுவாழ் மாணவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். கல்லூரி படிப்பு நிறைவின் போது முன்னாள் மாணவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ அனைவருக்கும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியை இனி வருடந்தோறும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்- பேராசிரியர்களின் ஒருமித்த கருத்தாகவும், விருப்பமாகவும் இருந்தது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...