Pages

Friday, September 9, 2016

அதிரையில் பரபரப்பான விற்பனையில் குர்பானி ஆடுகள் !

அதிராம்பட்டினம், செப். 09
இசுலாமியர்களின் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை எதிர்வரும் [ 13-09-2016 ] காலை தமிழகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இசுலாமியர்கள் ஏழைகளுக்கு குர்பானி இறைச்சிகளை தானமாக வழங்குவார்கள். இதற்காக ஆடு, மாடுகள் விற்பனைக்காக அதிரையில் குவிந்துள்ளது. குறிப்பாக அதிரை சுற்று வட்டார கிராமப்பகுதி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட செம்மறி இன ஆடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

அதிராம்பட்டினத்தில் உள்ள இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் குர்பானி ஆடு விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முழு ஆடுகளாகவும், எடை வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆடுகளும் சராசரியாக 16 முதல் 30 கிலோ வரை எடையளவு கொண்டுள்ளது. முழு ஆடு சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பெரும்பாலும் காலை நேரங்களிலேயே ஆடுகளை ஆர்வத்துடன் வாங்கி அடையாளத்திற்காக மையினால் ஆன விலாசங்களை குர்பானி ஆட்டின் மீது பதிந்து மந்தையோடு ஆடுகளை மேய விடுகின்றனர். பெருநாள் பண்டிகையின் முந்தைய நாளில் ஆடுகளை மந்தையிலிருந்து மீட்டு செல்வார்கள்.

இது ஒருபுறமிருக்க, வழக்கம் போல் இந்த வருடமும் அதிராம்பட்டினத்தில் இயங்கிவரும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கூட்டு குர்பானி திட்டத்தின் மூலம் ஆடு, மாடுகளின் பங்குகள் பொதுமக்களிடம் பெரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் குர்பானி தோள்களை வசூல் செய்யும் முயற்சியிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் கிடைக்ககூடிய வருவாய் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...