Pages

Sunday, September 4, 2016

அமீரகத்தில் ஹஜ் பெருநாள் விடுமுறை அதிகாரபூர்வ அறிவிப்பு !

அதிரை நியூஸ்:
துபாய், செப். 04
எதிர்வரும் வாரம் உலகெங்கும் தியாகத் திருநாள் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து தனியார் நிறுவனங்களுக்கான விடுமுறை நாட்களை அமீரக அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 11 முதல் 13 ஆம் தேதி வரை தனியார் நிறுவனங்களுக்கான விடுமுறை தினங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரம் இரு தினங்கள் வெள்ளி, சனி விடுமுறையை ஏற்கனவே அனுபவித்து வருபவர்களுக்கு சேர்த்து தொடர்ச்சியாக 5 நாட்கள் கிடைக்கும், இவர்கள் கொடுத்து வைத்த மகராசன் வகையை சார்ந்தவர்கள்.

வெள்ளிக்கிழமை மட்டும் வார விடுமுறையுள்ள எங்களைப் போன்ற தனியார் நிறுவன ஊழியர்கள் இடையில் சனிக்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டும், நாங்கள் எல்லாம் நன்மைக்கே என ஆறுதல் பட்டுக்கொள்ளும் வகையை சார்ந்தவர்கள்.

அரசுத்துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் 17 ஆம் தேதி வரை தான் லீவுங்களாம், வரும் வெள்ளி முதல் அடுத்த சனி வரை 9 நாட்கள், இவர்கள் அனுபவி ராசா அனுபவி வகையை சார்ந்தவர்கள்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...