Pages

Thursday, September 8, 2016

மழைக் காலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவிப்பு !

மழைக் காலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் திருமதி.க.அருள்மொழி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மின்சார ஓயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்யுங்கள்.  ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பன்படுத்துங்கள்.  மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்டை ‘ஆப்’ செய்துவிடுங்கள்.  ரேப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மின் இணைப்பு கொடுங்கள்.  ஈ.எல்.சி.பி. (மின் கசிவு தடுப்பான்) யை பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்தை தவிர்த்திடுங்கள்.  உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள்.  பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்காதீர்கள். டிவி ஆண்டனாவை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் கட்டாதீர்கள்.  டி.வி ஆண்டனாவின் ஸ்டே வயரை மின் கம்பத்தில் கட்டாதீர்கள்.  கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.

ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும்.  சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமையுங்கள்.  ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் ஓயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளுங்கள்.

மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள Extension cord ன் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலைத் தவிர்க்கவும்.   குளியலறையிலும் கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளைப்  பொருத்ததாதீர்கள்.   சுவற்றின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்கவும்.  மின் இணைப்பிற்கு நஒவநளெழைn உழசன-கள்  உபயோகிக்கும் போது அவைகளில் பழுதுகள் ஏதும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டாதீர்கள். மின் கம்பத்தை டி.வி. கேபிள்கள் மற்றும் யு.ஏ. வயர்கள் ஆகியவற்றை தாங்கி செல்ல பயன்படுத்தக்கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது.  அதன் மீது விளம்பர பலகைகள் கட்டக்கூடாது.

மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், ளுவயல  வயர்கள்  ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள். மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லாதீர்கள். அதைக் குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாகத் தகவல் அளியுங்கள்.   மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.  மேலும், விவரங்களுக்கு மின்சார வாரியம் மற்றும் மின்சார ஆய்வுத்துறை அலுவலர்களை அணுகவும்.

தமிழ்நாடு மின்வாரிய மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்க செல்லாதீர்.  மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுகவும்.

அவசர நேரங்களில் மின் இணைப்பினை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இப்பிடம் அமைய வேண்டும்.  இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காதீர்கள்.  இடி அல்லது மின்னலின் போது உடனடியாக கான்கிரிட் கூரையிலான பெரிய கட்டிடம் வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே முடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடையுங்கள்.  இடி அல்லது மின்னலின்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகாதீர்கள்.

இடி அல்லது மின்னலின் போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகலுங்கள்.  இடி இல்லது மின்னலின் போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள்.  இடி அல்லது மின்னலின் போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். இடி அல்லது மின்னலின் போது திறந்தவெளி உள்ள சன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள். இவ்வாறு தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் திருமதி.க.அருள்மொழி தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...