Pages

Wednesday, September 14, 2016

அதிரை ஈசிஆர் சாலையில் ஆம்னி பேருந்து - ஆட்டோ வாகனம் மோதி விபத்து: ஒருவர் காயம் !

அதிராம்பட்டினம், செப். 14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் ஆம்னி பேருந்து மீது ஆட்டோ வாகனம் மோதி ஒருவர் காயம்.

அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் பரகத் அலி (வயது 40). ஆட்டோ வாகன ஓட்டுனர். இன்று புதன்கிழமை இரவு ஆட்டோ வாகனத்தில் தஞ்சாவூர் மாவட்டம், ராஜாமடத்திலிருந்து அதிராம்பட்டினம் நோக்கி ஈசிஆர் சாலையில் வந்துகொண்டிருந்தார். வாகனம் ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல் அருகே வந்த போது, எதிரே முத்துப்பேட்டை தர்ஹாவில் வழிபாட்டை முடித்துக்கொண்டு ஏர்வாடி தர்ஹாவை நோக்கி சென்றுகொண்டிருந்த கேரளாவை சேர்ந்த ஆம்னி பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுனர் பரகத் அலிக்கு கை மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டன. உடனே சிகிச்சைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் ஆட்டோ வாகனத்தின் முன் மற்றும் பின் பகுதிகள் இரண்டு துண்டுகளாக உடைந்து சேதமடைந்தது. ஆம்னி பேருந்தின் வலது புற பகுதி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் ஈசிஆர் சாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...