Pages

Tuesday, September 13, 2016

அதிரையில் TNTJ நடத்திய பெருநாள் திடல் தொழுகை ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், செப். 13
தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை இஸ்லாமியர்களால் தமிழகமெங்கும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை ஈசிஆர் சாலை பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் இன்று காலை 7.25 மணிக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய மார்க்க பிரசாரகர் கலந்தர் Misc அவர்களின் இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-2 சார்பில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிஎம்பி லேன் பகுதியில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அதிரையில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற திடல் தொழுகையில் இப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். மைதானத்தில் பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...