அதிரை நியூஸ், அக்-14
மும்பையில் இருந்து அமீரகத்திற்கு கடத்த முயன்ற 199 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவு 4 தள்ளுவண்டியில் 199 நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற 2 பயணிகள் பிடிபட்டனர்.
சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர்கள் 2 பேரும் அமீரக நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. இவர்கள் நட்சத்திர ஆமைகளை மும்பையில் இருந்து வாங்கி அமீரகத்திற்கு கடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள், கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் மீதும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளின் இன வகை குறித்து மாநில வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் கோரப்பட்டுள்ளது. இந்திய வனவிலங்கு சட்டப்படி, உயிருடன் ஆமைகள் ஏற்றுமதி, இறக்குமதி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று கடத்தப்படும் உயிரினங்கள் இடையிலேயே இறந்து விடுவதும் உண்டு' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source: Khaleej Times

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.