Pages

Sunday, October 9, 2016

செல்ஃபி மோகம் - ஓமனில் 2 இலங்கை மாணவிகள் நீரில் முழ்கி பலி !

அதிரை நியூஸ்: அக்-09
நேற்று சனிக்கிழமை மாலை ஓமனின் பிரசித்தி பெற்ற இயற்கை சுற்றுலாத்தலமான 'ஸலாலா' (Salala) நகரிலிருந்து 15 கி.மி தொலைவிலுள்ள 'அய்ன் ஜர்ஜிஸ்' எனும் நீர்நிலை (Ain Jarziz Water Spring) அருகே குடும்பத்துடன் பிக்னிக் சென்ற 2 இளம் பள்ளி மாணவிகள் செல்ஃபி எடுக்கும் போது தவறிவிழுந்து நீரில் முழ்கி இறந்தனர்.

ஸலாலாவிலுள்ள இந்திய பள்ளிக்கூடத்தில் பயிலும் ஸைனப் (Zainab) மற்றும் ரூவன் (Ruwan) என்கிற இந்த இலங்கை மாணவிகளுக்கு (இருவருக்கும் வயது சுமார் 13) நீச்சல் தெரியாததுடன் அவர்களுடன் சென்ற பெற்றோர்களுக்கும் நீச்சல் தெரியாது என்பதால் 15 கி.மி தூரத்திலிருந்து உதவிக்குழுக்கள் வந்து சேருமுன் இருவரும் முழ்கி இறந்தனர்.

ராயல் ஓமன் போலீஸாரின் அறிவிப்பின்படி, ஒமனில் நடைபெற்ற முதல் செல்ஃபி இறப்புக்கள் இதுவே என தெரிகிறது என்றாலும் உலகெங்கிலும் இந்த பைத்தியக்கார பழக்கமான செல்ஃபியால் ஏற்படும் மரணங்கள் சகட்டுமேனிக்கு அதிகரித்து வருகின்றன.

ஆபத்தான செல்ஃபிக்களைவிட உங்கள் உயிர்கள் முக்கியமாவை என உணருங்கள் சக உயிர்களே!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...