Pages

Saturday, October 15, 2016

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ரூ. 26 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: எம்.எல்.ஏ தகவல் !

அதிமுக ஆட்சியின் 100 நாள்களில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் பட்டுக்கோட்டை தொகுதியில் ரூ. 26 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக தொகுதி எம்எல்ஏ சி.வி. சேகர் தெரிவித்தார்.

இதுகுறித்து பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:
அதிராம்பட்டினம் கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை ஆகிய இடங்களில் அப்பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மீன்பிடி இறங்குதளம், வலைக்கூடம், மின் உலர்க்களம், சாலை மேம்பாடு ஆகியவற்றை அமைக்க ரூ. 4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை நகரில் காவலர் குடியிருப்புக்கு ரூ. 1 கோடி, நகர்ப்புற சுகாதார நிலைய மேம்பாட்டுக்காக ரூ. 60 லட்சம், மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை உள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஏனாதி அரசு உயர்நிலைப் பள்ளி, செங்கப்படுத்தான்காடு அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் புதிய கட்டடங்கள் கட்ட ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுக்கூர் ஒன்றியம், பெரியகோட்டை கிராமத்தில் கால்நடை மருந்தகம் கட்ட ரூ. 70 லட்சம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்காக  ஆர். வைத்திலிங்கம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 40 லட்சம், எக்ஸ்ரே, ஸ்கேனர் போன்ற உபகரணங்கள் வாங்க எம்எல்ஏ சி.வி. சேகர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டுக்கோட்டை-செங்கிப்பட்டி சாலையில் நம்பிவயல் கிராமத்தில் ரூ. 7.40 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதுதவிர, ஊரக சாலை மேம்பாடு திட்டத்திற்கு ரூ. 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அந்தப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றார் எம்எல்ஏ சி.வி. சேகர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...