Pages

Sunday, October 9, 2016

துபாயில் நம்பர் பிளேட்டை 33 மில்லியன் திர்ஹத்திற்கு ஏலம் எடுத்த இந்தியர் !

அதிரை நியூஸ்:
துபாய், அக்-09
துபாயில் நேற்று மரியோட் (JW Marriott Marquis) ஹோட்டலில் நடைபெற்ற பேன்ஸி நம்பர் பிளேட் ஏலத்தில் சுமார் 80 நம்பர் பிளேட்டுகள் கூடியிருந்த 300க்கு மேற்பட்ட ஏலதாரர்களுக்கு மத்தியில் பகிரங்க ஏலமிடப்பட்டன.

இதில் D 5 என்கிற ஒற்றை எண் நம்பர் பிளேட்டை ஏலம் எடுப்பதிலேயே மிகக்கடும் போட்டி நிலவியது, கடைசியில் அமீரகம், குவைத், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் 'ரியல் எஸ்டேட்' தொழிலில் ஈடுபட்டுள்ள 'பல்விந்தர் சஹானி'என்ற இந்திய வர்த்தகர் 33 மில்லியன் திர்ஹத்திற்கு ஏலமெடுத்ததுடன் கூடுதலாக மேலும் ஒரு நம்பர் பிளேட்டை 1 மில்லியன் திர்ஹத்திற்கும் ஏலமெடுத்தார்.

மூடத்தனங்களில் ஒன்றாக விளங்கும் எண் கணித சாஸ்திரத்தில் நம்பிக்கையுடைய இவர் ஏலம் எடுத்ததன் காரணத்தை கூறும்போது, ஆங்கில எழுத்தான D 4 வது எழுத்தாக அமைந்துள்ளதாலும் அதற்கு அடுத்து வரும் எண் 5 ஆக அமைந்து அதன் கூட்டுத்தொகை அவரது ராசி எண்ணான 9 ஆக வருவதால் ஏலம் எடுத்தாராம்? ஆனால் பைசாவுக்கும் புண்ணியமில்லாத அந்த பேன்ஸி எண் அவரிடம் வரும் போதே 33 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு வந்ததை உணரும் நிலையில் இல்லை.

இதே நபர் கடந்தாண்டு நடைபெற்ற ஏலத்தில் 09 என்ற எண்ணை 25 மில்லியனுக்கு ஏலமெடுத்துள்ளராம். இவரைப்போல் எண் கணிதத்தில் நம்பிக்கையில்லாத நிலையில் பேன்ஸி எண் என்ற ஒற்றை அற்ப சுக காரணத்திற்காகவும் நம்பர் பிளேட்டுகள் ஏலம் போயின.

Q 77 என்ற எண் 4.52 மில்லியன் திர்ஹத்திற்கும்,
P 27 என்ற எண் 2.14 மில்லியன் திர்ஹத்திற்கும்,
R 7777 என்ற எண் 1.17 மில்லியன் திர்ஹத்திற்கும் ஏலம் போயுள்ளன.

2008 ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் எண் 1 என்ற நம்பர் பிளேட் 52.2 மில்லியன் திர்ஹத்திற்கு ஏலம் போனதே இதுவரை அமீரக அளவில் சாதனை ஏலமாக நீடிக்கிறது.

தமிழில்: நம்ம ஊரான்

2 comments:

  1. ஆசை!மனிதனுக்குபணத்தின் அதுவந்ததும்அடுத்து அவன் தேடுவது புகழ் ஆசை!புகழைதேடும் மனிதன் தனக்குதானே ஒருசவக்குழியை தோண்டிக்கொள்கிறான். இந்த33 திர்காத்தை ஏழைநாட்டுமக்களின் பசிப்பிணி போக்கவும்அவர்களின் நோய் நொடிகள்போக்க கொடுத்திருந்தால் அல்லாஹ் அவனை என்றும் நிரந்தர சொர்க்கத்தின்விருந்தாளியாக ஆக்கி இருப்பான்.

    ReplyDelete
  2. //இந்த33 திர்காத்தை//என்று இருப்பதை/ இந்த33Million திர்காத்தை-என்று திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...