Pages

Tuesday, October 18, 2016

துபாய் தொழில்நுட்ப ஜீடெக்ஸ் கண்காட்சியில் புதிய ரேடார் காமிரா அறிமுகம் !

அதிரை நியூஸ், துபாய், அக்-18
துபையில் ஒவ்வொரு வருடமும் ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸ் (Gitex Shoppers) எனும் சில்லறை விற்பனைக்கான புதிய மின்னனு பொருட்களின் கண்காட்சி நடைபெற்று முடிந்தவுடன் புதிய நவீன கண்டுபிடிப்பு கருவிகளை காட்சிப்படுத்தி விளக்கும் கண்காட்சி 'ஜீடெக்ஸ் டெக்னாலஜி வீக்' (Gitex Technology Week) எனும் பெயரில் நடைபெறும். அதன்படி கடந்த அக்டோபர் 1 முதல் 8 வரை நடைபெற்ற ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸை தொடர்ந்து அக்டோபர் 16 முதல் 20 வரை ஜீடெக்ஸ் டெக்னாலஜி வீக் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த டெக்னாலஜி வீக் கண்காட்சியில், துபையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போக்குவரத்து ரேடார் கேமிரா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எடை குறைவான, அகச்சிவப்பு ஒளிக்கதிர் (Infrared Technology) தொழிற்நுட்பத்தில் செயல்படும் ரேடார் காமிரா 50 மீட்டர் தூரம் வரை அதிவேகத்தில் செல்லும் வாகனங்களையும், மஞ்சள் கோட்டில் எல்லை மீறும் வாகனங்களை படம்பிடிப்பதுடன் 10 நொடிகள் வீடியோ பதிவு செய்யும் தன்மையுடையது. ஃபிளாஸ் (Flash) தேவையில்லாதது.

எல்லை மீறிய வேகத்தில் முரட்டுத்தனமான வாகன ஒட்டிகளை (Hard Shoulder Drivers) உயர் தொழிற்நுட்பத்தில் படமெடுக்கும் இக்கேமரா (High Resolution Photos) 3ஜி இணைப்பு வழியாக அல்லது பென்டிரைவ் பதிவு மூலம் தகவல்களை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பும் மேலும் இதை தற்காலிகமாக சாலை மறைவுகளிலும், நிரந்தரமாக சாலை நடுவிலும் பொருத்தலாம். பேட்டரியிலும், நேரடி மின்சாரத்திலும், சோலார் மின்சாரத்திலும் இயங்கக்கூடியது. மேலும் ரிமோட் மூலமும் கட்டுப்படுத்த முடியும்.

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,  இந்த காசு புடுங்குற ஐட்டத்தை சீக்கிரம் துபை ரோட்டுல பாக்கலாம்!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...