Pages

Wednesday, October 5, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் நடக்கும் தஞ்சாவூர் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி துவக்க விழா நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இவ்விழாவில் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர்.கே.முருகானந்தம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். விளையாட்டுப் போட்டியை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம்.உதுமான் முகையதீன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

விளையாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.எஸ்.சாகுல் ஹமீது சிறப்புரை ஆற்றினார். தஞ்சை மண்டல அளவில் 15 கல்லூரியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த விளையாட்டுத்துறை இயக்குநர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விளையாட்டுப் போட்டியில் தஞ்சை மண்டல அளவில் வெற்றி பெற்ற இரண்டு அணிகளும் திருச்சி மண்டலத்தில் வெற்றி பெற்ற இரண்டு அணிகளும் வருகின்ற அக். 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் இறுதி போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குநர் முனைவர்.கே.முருகானந்தம் செய்தார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...