Pages

Wednesday, October 12, 2016

அல் அய்னில் ஒட்டகக் கடியில் துண்டான விரல் மீண்டும் பொருத்தப்பட்டது !

அதிரை நியூஸ்:
துபாய், அக்-12
அபுதாபி எமிரேட்டின் பாலைவனச் சோலை (Oasis) நகரான அல் அய்னில் ஒட்டகம் ஒன்று தீவனம் ஊட்டிய 26 வயது நபரின் நடுவிரலை கடித்து துப்பியது. எனினும் அவர் விரைவாக அல் தவாம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட. அங்கு மைக்ரோ சர்ஜரி அடிப்படையில் மீண்டும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இன்னும் 4 வாரங்களில் கடிபட்ட விரல் பழையபடி இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அல் தவாம் மருத்துவமனையின் பிலாஸ்டிக் சர்ஜரி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் அம்மார் அல் தாமின் கூறுகையில், இது போன்ற ஒட்டகக்கடி சம்பவங்கள் அடிக்கடி நிகழும் ஒன்று தான் என்றாலும் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வருவதன் மூலம் உரிய சிகிச்சையளிக்க முடியும். மேலும், ஒட்டகங்கள் இனச்சேர்க்கை தேவைப்படும் காலங்களிலேயே இதுபோல் மூர்க்கமாக நடந்து கொள்கின்றன எனவும் தெரிவித்தார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...