Pages

Wednesday, October 5, 2016

அதிரை பேரூராட்சி கவுன்சிலர் வேட்பாளர் சி.வி சேகர் எம்எல்ஏ வை சந்தித்து கோரிக்கை !

அதிராம்பட்டினம், அக்-05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் நஜ்முதீன். அதிரை பேரூராட்சி 8 வது வார்டு அதிமுக கவுன்சிலர் வேட்பாளராக கட்சி தலைமை அண்மையில் இவரை அறிவித்தது.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்எல்ஏ வை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.அப்போது தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி உதவியில் சாலை வசதி, கழிவு நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தார். அருகில் அதிமுக அதிரை பேரூர் செயலர் பிச்சை உள்ளார்.

1 comment:

  1. கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தது நிறைவேறிவிட்டது ??? இப்போ வேட்பாளரின் கோரிக்கை இதெல்லாம் தேர்தலின் " தந்திரம்" என்று தான் சொல்ல வேண்டும். போட்டியிடும் எல்லா வேட்பாளரும் பொய்வாக்குறுதிகளில் நான் " வார்டில் உள்ள குப்பைகளை அல்ல முயற்சி செய்வேன்" என்று சொல்லுகிறார்கள். வார்டில் குறைந்தது 5 வேட்பாளர் போட்டியிடுகிறார்கள் அவர்களின் குடும்பம் தன வீட்டை சுற்றி சுத்தமாக வைத்தாலே குப்பை குறைந்து விடும். தார்சாலை போடுவது இருக்கட்டும் முதலில் MLA வை மக்கள் சந்திக்க அவர் அதிரையில் ஒரு அலுவலகம் திறக்கட்டும். பிறகு மக்களே கோரிக்கை வைத்து விடுவார்கள்.
    தேர்தல் ரத்துனு சொல்லி ஆப்பு வச்சிட்டாங்க மாப்பு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...