Pages

Monday, October 24, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் 'நன்மை தரும் பூச்சிகள்' குறித்து சிறப்பு கருத்தரங்கம் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் பூச்சிகளால் மனிதருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்பு கருத்தரங்கம் இன்று திங்கட்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

தொடக்கத்தில் விலங்கியல் சங்கம் அமைப்பாளர் முனைவர் ஏ அம்சத் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை உரை நிகழ்த்தினார். விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் பி குமாரசாமி அறிமுக உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர், பூச்சியியல் வல்லுநர் முனைவர் எஸ். ஜனார்தனன் கலந்து கொண்ட பேசுகையில்;
பூச்சிகள் பல மனிதனுக்கு உணவாகப் பயன்படுகின்றன. தேனீக்கள் சேமிக்கும் மெழுகு அலங்காரப் பொருட்கள் தயாரிக்கவும், தேனீ சுரக்கும் 'தேன்' மருந்து பொருளாகவும் பயன்படுகின்றன. பட்டுப்புழுவிலிருந்து பட்டாடைகள் தயாரிக்கப்படுகின்றன. பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால் விவசாயப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கின்றன. ஈ வகைகளில் ஒன்றாகிய டிரோசபைலா ஈ மரபியல் ஆய்வுக்கு பயன் படுத்தப்படுகிறது. மண்ணில் வாழும் பூச்சிகள் மண் அமைப்பு மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன. இறந்த விலங்கு அல்லது தாவர சிதைவு மற்றும் ஊட்டச் சுழற்சியை வேகப்படுத்த உதவுகின்றன. அழகான வண்ணத்துப்பூச்சிகள் மனதுக்கு மகிழ்ச்சியை தருகின்றன. எனவே மனித நலனுக்கு நன்மை பகிக்கும் பூச்சிகளை நாம் பாதுகாக்க வேண்டும்' என்றார்.

விழாவில் முனைவர் முத்துகுமாரவேல், முனைவர் ஓ சாதிக்,  முனைவர் வி கானப்ரியா, முனைவர் ஏ  மஹாராஜன், முனைவர் ஜே சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ் ரவீந்திரன்  நன்றி கூறினார். இவ்விழாவில் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...