Pages

Tuesday, October 18, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்களுக்கான 'மன அழுத்த மேலாண்மை' பயிலரங்கம் நிகழ்ச்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-18.
தஞ்சாவூர் மாவட்டம்இ அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் மாணவர்கள் ஆலோசனை மையம் சார்பில் 'இளம்வயது சிக்கல்கள் மற்றும் மன அழுத்த மேலாண்மை' என்ற தலைப்பில் மனநல மருத்துவர் விரிவுரை நேற்று திங்கள் கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
 
தொடக்கத்தில் மாணவர்கள் ஆலோசனை மையம் அமைப்பாளர் முனைவர் ஏ அம்சத்; வரவேற்பு உரை நிகழ்த்தினார். அவர்  இந்த மையத்தின்  நோக்கம் மற்றும் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கி திறைமையை வெளிப்படுவதட்காக   செய்யப்படும் நடவடிக்கைகளை  விளக்கினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ எம் உதுமான் முகையதீன் தலைமை உரை நிகழ்த்தினார். இந்த  நிகழ்ச்சியினை தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி சிலார்  முகமது, வணிகவியல் துறைத் தலைவர் மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர், முனைவர் எஸ் ரவீந்திரன் இருவரும் முன்னிருந்து நடத்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட  டாக்டர் வி வினோத் எம்.பி.பி.எஸ், எம்.டி.(மனநலம்), மனநல மருத்துவர்,  காதிர் முகைதீன் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நேற்று திங்கட்கிழமை காலை  'இளம்வயது சிக்கல்கள் மற்றும் மன அழுத்த மேலாண்மை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவரது  உரையில்  மன அழுத்தம், கவலை, பயம், கோபம், வெறுப்பு, குற்ற உணர்வு, சுய அழிப்பு, தாழ்வு மனப்பான்மை, எரிச்சல், புரிந்தும் படிக்க இயலாமை, ஆளுமைச் சிதைவு, விரக்தி, குழப்பம், உணர்வுரீதியான பிரச்சினை போன்றவற்றை  நீக்க ஆலோசனை கூறினார்.

தேர்வில் மாணவர்களின் சிறந்த செயல்திறன் அதிகரித்தல், வேகமாக கற்றல்,  நேரம் மேலாண்மை, நல்ல மதிப்பெண்கள் பெற்றல், எதிர்த்து போராடும்  வீரம் இருத்தல்,   தன்னம்பிக்கையை வளர்த்தல், எப்பொழுதும் சந்தோசமாக இருத்தல்,  மனதை நிம்மதியாக வைத்துக்கொள்தல், போன்ற ஆலோசனைகளை வழங்கினார். அதற்கு பிறகு, மாணவ மாணவிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு  தீர்வு பெற்றிட மனநல மருத்துவரிடம் கலந்துரையாடினார்.

முடிவில் மாணவர்கள் ஆலோசனை மைய உறுப்பினர்  முனைவர் டாக்டர் என் பரிதா பேகம் நன்றியுரை வழங்கினார். இவ்விழா நிகழ்ச்சியினை மாணவர்கள் ஆலோசனை மைய உறுப்பினர்  உதவி பேராசிரியர் ஆர் ஆர்த்தி தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார வழிகாட்டும் குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். முனைவர் கே முத்துகுமாரவேல், முனைவர் ஓ சாதிக், முனைவர் ஏ மஹாராஜன், முனைவர் ஜே சுகுமாரன், உதவி பேராசிரியர் எச் சுலைமான் மற்றும் உதவி பேராசிரியர் எஸ் நித்தியா போன்றவர்கள் இந்த நிகழ்ச்சி வெற்றிபெற உதவினார்கள். இவ்விழாவில் காதிர் முகைதீன் கல்லூரியின் பல்வேறு துறையைச் சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள் மற்றும்  மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மனநல மருத்துவரை மாணவர்கள் தனித் தனியாக சந்தித்து மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், பயத்தை போக்குதல், கவலை நீக்குதலுக்கான ஆலோசனையைப் பெற்று பயனடைந்தனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...