Pages

Wednesday, October 5, 2016

இலங்கையின் மிஹின் லங்கா விமான சேவை அடியோடு நிறுத்தம் !

அதிரை நியூஸ்: அக்-05
இலங்கையிலிருந்து சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் விமான நிறுவனமான 'மிஹின் லங்கா' (Mihin Lanka) தனது சேவைகள் அனைத்தையும் எதிர்வரும் அக்டோபர் 30 ஆம் தேதியுடன் நிறுத்துகின்றது என்றாலும் அதன் தடத்தில் இலங்கை அரசின் சிறிலங்கன் (Srilankan) விமான நிறுவனம் தொடர்ந்து சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த தனியார் நிறுவனம் முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவுக்கு சொந்தமானது என்றும் பரவலாக பேசப்படுகிறது.

இதற்கிடையில், எதிர்வரும் 2017 ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை கொழும்பு பண்டார நாயக்க விமான நிலைய முதன்மை ரன்வே சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 வரை விமான போக்குவரத்து நிறுத்தப்படுவதால் தென் இந்திய நகரங்களான சென்னை, திருச்சி, பெங்களுர், கொச்சி ஆகியவற்றுடன் சிங்கப்பூர், மாலே சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர தடங்களுக்கான சேவைகள் மாற்றியமைக்கப்பட்ட நேரத்தில் வழங்கப்படும்.

Source: Hirunews.lk
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...