Pages

Tuesday, October 4, 2016

சவூதி அரசு சம்பளத்திற்கும் இனி ஆங்கில தேதி கணக்கு !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, அக்-04
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்டுள்ள கடும் விலை வீழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு சவுதி அரேபியா. இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து வெளியேற சவுதி பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் பெட்ரோலிய வளத்தை மட்டும் நம்பாத மாற்றுப் பொருளாதார வளர்ச்சி குறித்தும் தூர நோக்கு சிந்தனையுடன் 'விஷன் 2030' என்ற திட்டத்தினையும் செயல்படுத்தி வருகிறது.

மேலும், அரச குடும்பம், அமைச்சர்கள், ஷூரா கவுன்சில் ஆலோசகர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருடைய மாதாந்திர சம்பளத்தையும் குறிப்பிட்டளவு ரத்து செய்ததுடன் போனஸ், சம்பள உயர்வு, பல்வேறு படிகள் (Allowances), சலுகைகள் உள்ளிட்டவற்றை ரத்து செய்துள்ளதை தொடர்ந்து இனி கிரிகோரியன் காலண்டர் எனப்படும் கிருஸ்தவ ஆங்கில காலண்டரின் கணக்கின்படியே அனைத்து அரசு சம்பளமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வருடத்திற்கு 11 நாட்களின் சம்பளம் மிச்சமாகும். (காசுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு!)

தகவலுக்காக...
நமது அண்டை நாடான இலங்கையில் உள்நாட்டு போர் உச்சத்தில் இருந்த போதும் இப்படித்தான் வரியை சகட்டுமேனி ஏற்றி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர் மேலும் இந்திய மணிக்கணக்கை (Indian Standard Time) ஒட்டியிருந்த இலங்கையின் மணிக்கணக்கில் ஒரு மணிநேரத்தை குறைத்தனர். உதாரணத்திற்கு, நமக்கு காலை 8 மணி என்றால் அவர்களுக்கு 8 மணி என்றிருந்ததை 7 மணி மாற்றினர். இந்த நேர மாற்றம் மூலம் மின்சாரம் உள்ளிட்டவற்றை மிச்சப்படுத்துவதுடன் போர் தொடர்பில் பல்வேறு சாதகங்களை அடைய முடியும் என நம்பினர், அது போகட்டும்.

ஆனால், போர் முடிந்தவுடன் வரிகள் அதிரடியாக குறைக்கப்பட்டதுடன் மணிக்கணக்கும் முன்பு போல் இந்திய நேரத்தை (IST) போலவே பழைய நிலைக்கு மாற்றம் செய்யப்பட்டன. இயற்கை வளம் அதிகம் இல்லாத இலங்கையாலேயே முடியும் போது சவுதியிலும் நல்ல பொருளாதார மாற்றங்கள் வரும் என நம்புவோம்.

Source: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...