Pages

Tuesday, October 4, 2016

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு !

அதிராம்பட்டினம், அக்-04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது.

காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் நிறைவு விழா முகாமிற்கு தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் எஸ். நாகராஜன், அனுராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கத்தில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி வரவேற்றார். முடிவில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சுராஜ் நன்றி கூறினார்.

முகாமில் பள்ளி வளாக தூய்மை, சாலைகள் சீரமைப்பு, பொதுசுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, அலையாத்தி காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் 50 பேர்களுக்கு கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இநிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 



 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...