Pages

Thursday, October 13, 2016

பட்டுக்கோட்டையில் மத்திய அரசைக் கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது ! ( படங்கள் )

பட்டுக்கோட்டை, அக்-13
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, இன்று ( அக்.13 ) மற்றும் நாளை அக்-14 -ல் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என எஸ்டிபிஐ கட்சி கடந்த அக்-08 -ல் நடத்திய மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

அதன்படி, எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இன்று காலை பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முஹம்மது இலியாஸ் தலைமை வகித்தார்.

போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். போராட்டத்தின் போது பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முஹம்மது இலியாஸ், பி.எஃப்.ஐ தஞ்சை தெற்கு மாவட்ட மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன், எஸ்டிடியூ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அமானுல்லா, செயற்குழு உறுப்பினர் அன்வர் உள்ளிட்டபோராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
   
  
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...