Pages

Saturday, October 8, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் அபாய மேலாண்மை திட்ட செயல்விளக்க பயிற்சி ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-08
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பேரிடர் அபாய மேலாண்மை திட்ட செயல்முறை விளக்கம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் பொதுமக்கள் கன மழை, வெள்ளம், போன்ற பேரிடர் ஆபத்து காலங்களில் தங்களது உயிரையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வது பற்றிய ஒத்திகை பயிற்சியை தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் முன்னிலையில், செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர். இதில் வெள்ளத்தில் சிக்கியவர்கள், அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்திலிருந்தும், நில அதிர்வுகளில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்தும் அவர்களை காப்பாற்றும் முறையான கயிறு வழி மீட்டல், ஏணி வழி மீட்டல், ப்ளாஸ்டிக் பாட்டில்கள், வாழை மரம், சாக்கு மற்றும் மரம், வாட்டர் கேன், லைஃப் ஜாக்கெட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி 15 வகையான செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சிகளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பட்டுக்கோட்டை நிலைய அலுவலர் மா. மெல்கியு ராஜா தலைமையிலான குழுவினர் செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்,

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் உமா மகேஷ்வரி செயல்முறை விளக்க உரையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நகராட்சி கமிஷனர் அச்சையா, தாசில்தார் திருநா. சுஜாதா ( பேரிடர் மேலாண்மை ), தாசில்தார் பாஸ்கரன் ( ஆதி திராவிட நலத்துறை ), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் ( மதுக்கூர் ), செல்வம் ( பேராவூரணி), விலாயுதம் ( பட்டுக்கோட்டை ), பட்டுக்கோட்டை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜகுமரி, காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ. முஹம்மது சித்திக் ( பொறுப்பு ), காதிர் முகைதீன் என்சிசி அலுவலர் மேஜர் கணபதி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பினர், ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பாளர் பார்த்தசாரதி, காதிர் முகைதீன் கல்லூரி என்சிசி மாணவ மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், என்எஸ்எஸ் மாணவ, மாணவிகள், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், பட்டுக்கோட்டை விவேகானந்தர் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு செயல் விளக்கப் பயிற்சியை பார்வையிட்டனர்.
 
  
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...