Pages

Sunday, October 23, 2016

உலகின் நீண்ட தூர நான் - ஸ்டாப் விமான சேவை - ஏர் இந்தியா புதிய சாதனை !

உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை இப்போது ஏர் இந்தியாவிடம்! டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கு பசிஃபிக் பெருங்கடல் ரூட் வழியாக 14.5 மணிநேரத்தில், 15,300 கிமீ தூரம் ஏர் இந்தியா விமானம் ஒன்று இடையில் நிற்காமல் இயக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எமிரேட்ஸ் இயக்கிய துபாய் - ஆக்லாந்து ட்ரிப்தான் உலகின் தொலைதூர நான் - ஸ்டாப் ட்ரிப்பாக கருதப்பட்டது.

அட்லான்டிக் கடல் வழியாக செல்வதைவிட பசிஃபிக் ரூட் 1,400 கிமீ அதிக தூரம். ஆனால், இரண்டு மணி நேரம் விரைவாகவே விமானம் சான் ஃப்ரான்சிஸ்கோவை சென்றடைந்தது. காரணம், அட்லான்டிக் கடல் வழியாக சென்றால் எதிர்காற்று மிக அதிகம் என்கிறது ஏர் இந்தியா. பசிஃபிக் வழியாக சென்றால், காற்றின் போக்கிலேயே வேகமாக விமானத்தை இயக்கி, அதிக தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்க முடியுமாம்.

நான்கு பைலட்டுகள்,  ராஜ்னீஷ் ஷர்மா, கௌதம் வர்மா, எஸ்.எம்.பலேக்கர், எம்.ஏ.கான் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் இதற்காக உழைத்திருக்கிறார்கள். போயிங் 777-200 லாங் ரேஞ்ச் ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மணிநேரம் பறப்பதற்கு 9,600 லிட்டர் எரிபொருளை 'குடிக்கும்!'

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குத்தான் இந்த சாதனை நிற்கும். காரணம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகருக்கு இடையில் நிற்காமல் 19 மணிநேரத்தில் 16,500 கிமீ செல்லக்கூடிய விமான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

நன்றி: விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...