Pages

Thursday, October 13, 2016

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் ரயில் சந்திப்பிலிருந்து சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (13.10.2016) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் (13.10.2016) இன்று சர்வதேச பேரிடர் குறைப்பு தினமாக   கடைப்பிடிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் பொது மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தஞ்சாவூர் ரயில் சந்திப்பிலிருந்து, காந்தியடிகள் சாலை, கீழராஜ வீதி ஆகிய தெருக்கள் வழியாக சென்று ராஜா மேல்நிலைப்பள்ளியில் இப்பேரணி முடிவடைந்தது. பேரணியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் தற்காப்பு நடவடிக்ககைகள் தொடர்பாக கோஷமிட்டவாறு சென்றனர்.  தீயணைப்புத் துறை மூலம் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு செயல்விளக்க நிகழ்ச்சியும், தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழை, புயல், சூறாவளி காற்று ஆகியவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.    பேரிடர் ஏற்படும் பொழுது மாநில அவசர கட்டுப்பாட்டு அறை 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், மாவட்டத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பாதிப்பு மற்றும் சேத விவரங்களை பொது மக்கள் தெரியப்படுத்தலாம். கட்டுப்பாட்டு அறைக்குள் வரப்படும் சேதம் மற்றும் பாதிப்பு தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சரி செய்யப்படும்.

இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், வட்டாட்சியர் குருமூர்த்தி, மற்றும் ராஜா மேனிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...