Pages

Friday, October 7, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் இயற்பியல்துறை சார்பில் தேசிய கருத்தரங்கு நிகழ்ச்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறையில் Energy security for Tamil Nadu - Role of Renewables என்ற தலைப்பில் ஒருநாள் தேசியக்கருத்தரங்கு கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழா தொடக்கத்தில் இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் ஆயிஷா மரியம் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

காரைக்குடி சிஇசிஆர்ஐ ( CECRI ) ஓய்வு பெற்ற விஞ்ஞானி முனைவர் எம்.ஜெயச்சந்தின் மற்றும் முதுநிலை முதன்மை விஞ்ஞானி முனைவர் எம். பரமசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள். மேலும் சிஇசிஆர்ஐ பாலகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

முன்னதாக விழாவை Physics Research Association முனைவர் ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை இத்துறை ஆராய்ச்சி மாணவி நிவேதா ஷாஜஹான் தொகுத்து வழங்கினார்.

கருத்தரங்கத் தலைப்பு குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற இயற்பியல் துறை மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிவில் கல்லூரி உதவிப் பேராசிரியர் சேகர் நன்றி கூறினார். இந்த கருத்தரங்கில் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் சுற்றுவட்டாரக்கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...