Pages

Saturday, October 8, 2016

அதிராம்பட்டினம் துறைமுகம் பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க கோரிக்கை !

அதிராம்பட்டினம், அக்-08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் துறைமுக பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவ தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏஐடியூசி மீனவ தொழிற்சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் காளிதாஸ், மத்திய, மாநில அரசுக்கு அண்மையில் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் துறைமுகப் பகுதியிலிருந்து 1500 மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு இரவு நேரத்தில் அதிராம்பட்டிணம் துறைமுகம் திரும்பும்போது திசை தெரியாமல் சில மீனவர்கள் வேறு துறைமுகப் பகுதிக்கு சென்று விடுகின்றனர். எனவே அதிராம்பட்டினம் துறைமுக பகுதியில் உயர் கோபுர கலங்கரை விளக்கம் அமைத்து கொடுத்தால் அந்த கலங்கரை விளக்கின் வெளிச்சத்தில் மீன் பிடித்துவிட்டு வரும் மீனவர்கள் திசை மாறாமல் குறிப்பிட்ட நேரத்தில் துறைமுகம் வந்து சேர்வார்கள். எனவே அதிராம்பட்டினம் துறைமுக பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஜமீல் எம். ஸாலிஹ் வழங்கிய கருத்துரை:

    அதிரை, துறைமுகமாக நீண்டகாலம் செயல்பட்டதையும் துறைமுகம் தூர்ந்த பிறகு வெகுகாலம் ரேவடியில் லைட் ஹவுஸ் இருந்ததையும் ஆசிரியர் குறிப்பாக வெளியிட்டிருக்கலாம்.

    http://wikimapia.org/33908001/light-house

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...