Pages

Friday, October 7, 2016

தஞ்சையில் மு.க ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் !

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் அமைக்க முடியாது என மறுத்து விட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை புறக்கணித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட தி.மு.க. சார்பில் தஞ்சையில் உண்ணாவிரதம் நடைபெறும் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்து இருந்தது.

இதற்கு தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஓருங்கிணைப்பு குழு, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு ஆதரவு தெரிவித்தது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் துரை முருகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர். பாலு, பழனி மாணிக்கம், தேர்தல் பணிக்குழு தலைவர் எல். கணேசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பொன். முத்துராமலிங்கம், உபயத்துல்லா, மதிவாணன், மாவட்ட செயலாளர்கள் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., (தஞ்சை தெற்கு) கல்யாண சுந்தரம் (தஞ்சை வடக்கு) பூண்டி கலைவாணன் (திருவாரூர்), நிவேதா முருகன் (நாகை வடக்கு) கவுதமன் (நாகை தெற்கு) எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் பொய்யாமொழி, எம். ராமச்சந்திரன், அன்பழகன், கோவி. செழியன், டி.ஆர்.பி. ராஜா, ஆடலரசன். தஞ்சை நகர தி.மு.க. செயலாளர் டி.கே.ஜி. நீலமேகம், மாநில மகளிர் அணி துணை செயலாளர் காரல் மார்க்ஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண். ராமநாதன். தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், விவசாயிகள்ள சங்க கக்கரை சுகுமாறன், செல்லமுத்து, மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடந்தது.

அதிராம்பட்டினத்திலிருந்து அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம், திமுக அதிரை பேரூர் செயலர் இராம. குணசேகரன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...