Pages

Thursday, October 13, 2016

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உதடு மற்றும் உள் அன்னபிளவுப்பட்டோருக்கான வார்டை தமிழக ஆளுநர் தொடங்கி வைத்தார் !

தஞ்சாவூர், அக்-13
தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் தஞ்சாவூருக்கு இன்று வியாழக்கிழமை வருகை தந்தார். தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உதடு மற்றும் உள் அன்னபிளவுப்பட்டோருக்கான வார்டு தமிழக ஆளுநர் (பொ) வித்தியாசாகர் ராவ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

மீனாட்சி மருத்துவமனையில் இதுவரையில் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பிறவிலேயே இருந்த உதடு மற்றும் உள் அன்னபிளவு கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை மூலம் பயன்பெற்ற குழந்தைகள் தமிழக ஆளுநர் அவர்களுக்கு மலர்கொத்து கொடுத்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டெல்டா பகுதி மக்களுக்காக உலக தர மருத்துவ சேவையை வழங்குவதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என மீனாட்சி மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் தெரிவித்தார். அப்போது மருத்துவமனை இணை இயக்குனர் காமினி குருசங்கர் அருகில் இருந்தார்.

டாக்டர் செளமியா ஸ்மைல் ட்ரெயின் திட்டம் பற்றிய விளக்க உரை ஆற்றினார். மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தஞ்சாவூர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டார்.

முன்னதாக தஞ்சாவூர் வருகை தந்த தமிழக ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவ் அவர்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...