Pages

Thursday, October 13, 2016

பட்டுக்கோட்டையில் பேரிடர் குறைப்பு தினம்-விழிப்புணர்வுப் பேரணி !

பட்டுக்கோட்டை, அக். 13:
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்தலின் பேரில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில்  பேரிடர் குறைப்பு தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு முன்னிலை வகித்தார். இதில், பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் மா. மெல்கியு ராஜா தலைமையில் தீயணைப்பு படையினர் கலந்து கொண்டு இயற்கை இடர்பாடு காலங்களில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் குறித்து தொடர்புடைய உபகரணங்களை கொண்டு செயல்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினர்.

இதில் பொதுமக்கள், வருவாய் துறை அலுவலர்கள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மாலையில் பேரிடர் குறைப்பு நாள் விழிப்புணர்வு பேரணி பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு  தலைமையிலும், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன்  முன்னிலையிலும் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியர் எல். பாஸ்கரன், வருவாய்த்துறை அலுவலர்கள் மரியஜோசப், அய்யம்பெருமாள், சுகுமார், தர்மேந்திரா, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்சிசி, என்எஸ்எஸ், ஜெஆர்சி மாணவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் அரசு ஆண்கள் பள்ளிக்குச் சென்றதும் பேரணி நிறைவடைந்தது.

பேரணியில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்ற மாணவர்கள் வழிநெடுகிலும் பேரிடர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...