Pages

Sunday, October 9, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டி ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டி அக்.7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட நான்கு அணிகள் லீக் முறையில் விளையாடினர்.

இதில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முதல் இடத்தையும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி இரண்டாம் இடத்தையும், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மூன்றாம் இடத்தையும், மேலையூர் பூம்புகார் கலைக் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றனர். நிறைவாக நடந்த பரிசளிப்பு விழாவில் சான்றிதழ்களும், பல்கலைக்கழக சுழற்கோப்பையும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர்.ஏ.முகம்மது சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி விளையாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.எஸ்.சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டுக்குழு செயலர் முனைவர்.ஏ.பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும், சுழற்கோப்பையும் வழங்கினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளரும், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குநருமான முனைவர். ஷான்ஷா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முன்னாள் துணை முதல்வர் முனைவர்.எஸ்.நசீர்தீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குநர் முனைவர்.கே.முருகானந்தம் செய்திருந்தார். விழா நிகழ்ச்சிகளை மேஜர் முனைவர்.எஸ்.பி.கணபதி அவர்கள் தொகுத்து வழங்கினார். இறுதியாக முனைவர்.எம்.நாசர் நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவில் பேராசிரியர்கள், அனைத்துக் கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குநர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...