Pages

Sunday, October 16, 2016

இறுதிகட்டப் பணியில் துபாய் செயற்கை கடல் கால்வாய் ( படங்கள் )

அதிரை நியூஸ்:
துபாய், அக்-16
துபாய் அரசுக்கு சொந்தமான தனி இயற்கை தீவுகள் ஏதுமில்லாத நிலையில் பாம் தேரா (Palm Deira), பாம் ஜூமைரா (Palm Jumeirah), பாம் ஜெபல் அலி (Palm Jebel Ali), தி வேல்டு (The World) என கடலில் காசைக் கொட்டி அதாவது கல்லையும் மண்ணையும் கொட்டி செயற்கை குடியிருப்பு தீவுகளை உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கம் ஜூமைரா கடற்கரையிலிருந்து 6 கி.மீக்கு ஒரு செயற்கை கால்வாயை (Dubai Canal) துபையின் முக்கிய பகுதியான ஷேக். ஜாயித் ரோட்டின் குறுக்காக ஊடுருவி உருவாக்கி, ஏற்கனவே துபை தேரா பகுதியில் ஆரம்பித்து ராஸ் அல் கோர் வரை 14 கி.மீ தூரத்திற்கு நகருக்குள் பயணிக்கும் 'துபை கிரீக்' (Dubai Creek) எனும் இயற்கை கடற்கால்வாயுடன் இணைத்து துபை நகரின் முக்கிய நீர்வழிச்சாலையாகயும், துபையின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் மாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பணிகள் முடிவுற்று அல் கைல் (Al Khail), பிஸ்னஸ் பே (Business Bay) அருகே துபை கிரீக்குடன் இணைக்கப்படும் போது பர்துபை (Bur Dubai), ஜூமைராவின் ஒரு பகுதி (Part of Jumeirah), அல் சபாவின் ஒரு பகுதி (Part of Al Safa), ஷேக்.ஜாயித் சாலையின் ஒரு பகுதி (Part of Shaik Zayid Road), ஃபினான்ஷியல் சென்டர் (Financial Center), அல் ஜட்டாப் (Al Jaddaf), டவுன்டவ்ன் துபை (Downtown Dubai), ஜபீல் (Zabeel), கராமா (Karama), அவுது மேத்தா (Oud Mehta), சத்வா (Satwa) போன்ற முக்கிய பகுதிகள் எல்லாம் மனிதன் உருவாக்கிய செயற்கை கடற் கால்வாயின் விளைவாக மேற்படி நிலப்பகுதிகளை சுற்றி வட்டவடிவில் கடல்நீர் சூழ்வதால் துண்டிக்கப்பட்டு பரிணமிக்கவுள்ள புதிய தீவின் பகுதிகளாக விளங்கும்.

துபை கிரீக்கின் 14 கி.மீ தூர கடலுடன் உடன் தோண்டப்படும் புதிய கடற்கால்வாய் இணையவுள்ளதால் கடலின் சுற்றளவு 27 கி.மீ தூரமாக உருவெடுக்கவுள்ளது. எனவே, கடற்போக்குவரத்திற்காக இருபுறமும் 18 புதிய படகு தளங்கள் உருவாகவுள்ளன. பிஸ்னஸ் பே அருகிலும் கூடுதலாக 7 படகுதளங்கள் உருவாகவுள்ளன. எதிர்வரும் 2 ஆண்டுகளுக்குள் இப்புதிய படகுதளங்களின் வழியாக சுமார் 6 மில்லியன் பயணிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த கால்வேயின் மேல் வாகன போக்குவரத்து பாலங்கள் (Fly Overs), நடைபாலங்கள் (Pedestrian Bridges), வணிக வளாகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், வானுயர்ந்த குடியிருப்புகள் என 3.2 கி.மீ தூர புதிய கடற்கரைகளில் இருபுறமும் அமையவுள்ளது.

சுமார் 80 மீட்டரிலிருந்து 120 மீட்டர் வரை இடத்திற்கேற்றாற்போல் சுருங்கி விரியும் அகலத்துடன் 8 மீட்டர் ஆழமுள்ளதாக இந்த கால்வாய் அமைவதால் இதுவரை 3.2 மில்லியன் கியூபிக் மீட்டர் மண்ணை தோண்டி அப்புறப்படுத்தியுள்ளனர்.

சுமார் 2 பில்லியன் திர்ஹம் செலவு திட்டத்தில் உருவாகியுள்ள இந்த செயற்கை கடற் கால்வாய் 2017 ஆம் ஆண்டில் திறக்கப்பட திட்டமிடப்பட்டதற்கு முன்பாகவே 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போது பிரமாண்ட ஆர்ச் அமைப்பது போன்ற மெருகூட்டும் வேலைகள் துவங்கியுள்ள நிலையில் ஜூமைரா பார்க் அருகே இத்தீவின் நீட்சி பிறை வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...