Pages

Tuesday, October 4, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் SMASH-16 தொழில்நுட்ப கருத்தரங்கம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 'SMASH-16' என்ற பெயரில் கணினி அறிவியல் ஒருநாள் கருத்தரங்கம் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது.

துவக்க விழா நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் முனைவர் பி.சிலார் முகமது தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பூண்டி ஏ.விவிஎம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பேராசிரியர் ஆர்.சுபாஷ் சந்திர போஸ் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கே. முருகானந்தம், SMASH-16 அமைப்பாளர், பேராசிரியர் முனைவர் என். ஜெயவீரன், SMASH-16 நிர்வாகி பேராசிரியர் முனைவர் ஏ. சேக் அப்துல் காதர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சி குறித்து அறிமுகத்தை கல்லூரி உதவி பேராசிரியர் ஹாஜா அப்துல் காதர் வழங்கினர். தொடக்கத்தில் கல்லூரி மூன்றாம் ஆண்டு எம்சிஏ மாணவி கீர்த்தனா வரவேற்றார்.

பின்னர் தொழில்நுட்ப கருத்தரங்க நிகழ்ச்சியின் நிறைவு விழா மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் எஸ். பர்கத், கல்லூரி பேராசிரியை எம். தஸ்லீமா ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில் ஆன்லைன், ஆஃப் லைன் என இரண்டு பிரிவுகளின் கீழ் 8 போட்டிகள் நடத்தப்பட்டன. விழா நிறைவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி சாம்பியன் பரிசை தட்டிச்சென்றது. இந்த கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 130 பேர் கலந்துகொண்டனர்.

தொடக்கத்தில் கல்லூரியின் பிசிஏ மூன்றம் ஆண்டு மாணவர் அன்சர்தீன் வரவேற்றார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு SMASH-16 செயலர் அஹமது ஹசன் செய்தார். முடிவில் SMASH-16 ஆலோசகர் எஸ்.ஜமான் ராசிக் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...