அதிரை நியூஸ்: குவைத், நவ-10
அரசு ஊழியர்கள் என்போர் உலகம் முழுக்க ஒரே மாதிரி தான் இருப்பார்களோ!
குவைத் அரசு ஊழியர்கள் பாதிக்கு மேற்பட்டோர் ஒழுங்காக வேலைக்கு வராததை தொடர்ந்து அதிரடி சோதனைகளை தொடர்ந்த அரசு ஆடிப்போயுள்ளது.
சுமார் 900 சந்தேகத்துக்குரிய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி சோதித்த பொது ஒருவர் 10 வருடங்களாக வேலைக்கே வராமல் சம்பளம் மட்டும் பெற்று வந்துள்ளார். இன்னொருவர் ஒன்றரை வருடமாக வேலைக்கு வராமலும் வெளிநாட்டில் வசித்துக் கொண்டுள்ள நிலையிலும் தொடர்ந்து சம்பளம் பெற்று வந்துள்ளார். அவரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது சொன்ன பதில் 'என் பாஸ் (மேனேஜர்) இதைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை அதனால் நானும் வரவில்லை' என சூப்பராக பதிலளித்துள்ளார்.
பொய்யான மருத்துவ விடுப்பின் மூலம் மட்டும் இதுவரை 10.5 மில்லியன் குவைத் தினார் (139.2 மில்லியன் திர்ஹம்) அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் மட்டும் பெருநாள் அரசு விடுமுறைக்கு முன்பாக 30,000 அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக மருத்துவ விடுப்பு எடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட 532,132 மருத்துவ விடுப்புக்கள் மூலம் மட்டும் 10,642,640 குவைத் தினார் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து குவைத் அரசு ஊழியர்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.