Pages

Friday, November 11, 2016

100 சதவிகிதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர் உறுதிமொழி ஏற்பு ( படங்கள் )

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில்,  சட்ட மன்ற தொகுதி வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவியர்களிடையே வாக்காளர் உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆ.அண்ணாதுரை, தேர்தல் பொது பார்வையாளர் ஷேக் அகமது மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (11.11.2016) நடைபெற்றது.

உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகின்ற 19.11.2016 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  அன்றைய தினம் வாக்களிக்க வசதியாக வாக்காளர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் மற்ற ஊர்களில் பணி செய்தாலும், தங்கள் வாக்குப்பதிவை பதிவு செய்யவும், ஜனநாயக கடமையாற்றவும், அன்றைய தினம் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.  எனவே வாக்காளர்கள் தவறாமல் 100 சதவிகிதம் நேர்மையாகவும், நியாயமாகவும், வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று அச்சமின்றி வாக்களிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கீழ்க்கண்டவாறு வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமகனாகிய / குடிமகளாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும், நிலைநிறுத்துவேன் என்றும், மேலும், தேர்தலில் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்பேன் என்றும் உறுதிமொழிகிறேன்.

வாக்களிப்பது ஜனநாயக உரிமை, கடமை
எனது வாக்கு விற்பனைக்கு அல்ல
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம்
100% நேர்மையாக வாக்களிக்க உறுதியேற்பேன்.

இந்நிகழ்ச்சியில் அரசினர் தொழில்பயிற்சி நிலையம், சேவியர் தொழில்நுட்ப பயிற்சி நிலையம், ஜெயம் நர்சிங் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 1500க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கல்லூரி மாணவ மாணவியர்கள் தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள் ஆகியோர்களிடம் தவறாமல் வருகின்ற 19.11.2016 அன்று வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என்றும், 100 சதவிகிதம் நேர்மையாகவும், நியாயமாகவும், வாக்களிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் வாக்களிக்க வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வருகின்ற 19.11.2016 அன்று வாக்களிக்கும் வைபோகம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.  மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீடுவீடாக சென்று வாக்களிக்கும் வைபோகம் அழைப்பிதழ் வாக்காளர்களுக்க வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் த.சுரேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம், சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலர் திருமதி.பூங்கோதை, தனி வட்டாட்சியர் திருமதி.பூங்கொடி மற்றும் ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...