Pages

Sunday, November 13, 2016

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி 14 ஆண்டுகளுக்கு பிறகு மாநில கூடைப்பந்து போட்டிக்கு தேர்வு !

பட்டுக்கோட்டை, நவ-13
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு இடையே மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் நவ. 8 முதல் 11 வரை நடைபெற்றது.

இதில் 19 வயதினருக்கான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் பங்கேற்ற பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி தஞ்சை அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணியை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

இதையடுத்து, பட்டுக்கோட்டை மாணவர்கள் அணி டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு மாநில கூடைப்பந்து போட்டிக்கு இப்பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 2016-ல் மீண்டும் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

இதையொட்டி, சாதனை நிகழ்த்திய 12-ம் வகுப்பு மாணவர்கள் யுகேஷ், குருமூர்த்தி, சித்தார்த்தன், ஹரிஹரன், கிஷோர், குணசீலன், 11-ம் வகுப்பு மாணவர்கள் இயலரசன், விக்னேஷ், நிஷார், இவர்களுக்கு பயிற்சியளித்த   உடற்கல்வி ஆசிரியர் முருகானந்தம் ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் சக்திவேல், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எஸ். மயில்வாகனன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...