Pages

Thursday, November 3, 2016

2025 ஆம் ஆண்டில் எமிரேட்ஸ் விமான சேவை, துபாய் அல் மக்தூம் விமான நிலையத்தில் இருந்து இயக்க முடிவு !

அதிரை நியூஸ்: துபாய், நவ-03
துபையில் 24 மணிநேரமும் பரபரப்பாக செயல்படும் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதியான டெர்மினல் 3ல் இருந்து தற்போது எமிரேட்ஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

2025 ஆம் ஆண்டிற்குள் எமிரேட்ஸ் விமானங்களின் மொத்த சேவையும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்படுவதுடன் எமிரேட்ஸ் விமானங்களின் இருப்பிடமாகவும் துபையின் முதன்மை (Home for Emirates Airlines & Dubai's Primary Airport) விமான நிலையமாகவும் செயல்படும்.

2000 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு சராசரியாக 13 சதவிகித கூடுதல் பயணிகளை கையாளும் துபை விமான நிலையங்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் உலகிலேயே அதிகமாக 78 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. எனவே, அதிகரிக்கும் பயணிகளின் சேவையை கருத்திற்கொண்டு துபை சர்வதேச விமான நிலையமும், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையமும் இன்னும் பல்வேறு வசதிகளுடன் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

துபையின் 2 சர்வதேச விமான நிலையங்களிலும் அனைத்து விரிவாக்கப் பணிகளும் நிறைவுறும் போது ஆண்டிற்கு 146 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் பெற்றிருக்கும்.

Source: 7 Days / msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...