Pages

Wednesday, November 30, 2016

3 நூற்றாண்டுகளை கண்ட 117 வயது மூதாட்டி !

அதிரை நியூஸ்: நவ-30
எம்மா மொரானோ (Emma Morano) என்கிற இந்த 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூதாட்டி இத்தாலி நாட்டின் வடபகுதியிலுள்ள மக்கியொரி ஏரி (Lake Maggiore) அருகில் அமைந்துள்ள வெர்பானியா (Verbania) எனும் நகரில் 1899 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் பிறந்தவர்.

1938 ஆம் ஆண்டு தனது ஒரே மகன் குழந்தை பருவத்திலேயே இறந்ததை தொடர்ந்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர் இன்று வரை தனித்தே வாழ்கிறார். 8 சகோதர, சகோதரிகளில் மூத்தவரான இவரைத்தவிர உயிருடன் யாருமில்லை, கணவர் உட்பட.

கடந்த 20 வருடங்களாக தனது அறையோடு நடமாட்டத்தை குறைத்துக் கொண்டவர். தற்போது கடந்த ஒரு வருடமாக பெரும்பாலான நேரம் படுக்கையே கதி என்றுள்ளார் என்றாலும் முன்பு தனது சுய தேவைகளுக்காக சாக்கு கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தவர்.

நவ.29 அன்று பிறந்த நாள் கொண்டாடும், வாழும் உலகில் அதிக வயதுடையவராக கின்னஸ் சாதனைக்குழு அங்கீகரித்துள்ள நிலையில் இவரை வாழ்த்துவதற்காக வெர்பானியா நகர மேயர் சில்வியா மர்சியொனினி, உறவினர்கள் பத்திரிக்கையாளர்கள் உடன் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, டூரின், மிலன் என உலகின் பல பகுதியிலிருந்தும் வருகை தந்துள்ள முகம் தெரிய ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தனக்கு செய்யப்பட்டு வரும் பிறந்த நாள் ஏற்பாடுகளை பார்த்து புன்னகைக்கும் இவருக்கு பிறந்த நாள் கேக்கை சாப்பிட முடியாதாம், காரணம் ஒவ்வாமை. இவருடைய தினசரி உணவு 2 முட்டைகள் மற்றும் சில பிஸ்கட்கள் மட்டுமே. முதுமையின் காரணமாக கேட்கும் சக்தி, கண் பார்வை குறைபாடு, பற்களையும் முழுமையாக இழந்துவிட்டவர் மெல்லிய அளவில் ஓரளவு பேசுகிறார் என்றாலும் அவருடைய ஞாபக சக்தி அப்படியே இன்னும் உற்சாகமாக உள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...