Pages

Wednesday, November 16, 2016

மருத்துவ உதவி கோரிக்கை ! [ ஷாஹிதா (வயது 4 ) / மூளை செயல்திறன் குறைபாடு ]

அதிராம்பட்டினம், நவ-16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேர்மன் வாடி அருகே வசிப்பவர் தாஹிரா ( 27 ). வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது கணவர் சாகுல்ஹமீது. இத்தம்பதியருக்கு ஷாஹிதா (4) என்ற பெண் குழந்தை பிறந்தது. பிறந்த 40 வது நாளில் குழந்தையின் தலை வழக்கத்திற்கு மாறாக சிறிய அளவில் இருந்ததால் மருத்துவரிடம் மருத்தவப் பரிசோதனை செய்ததில் குழந்தையின் மூளை செயல் திறன் குறைபாடு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து குழந்தையின் நிலையை அறிந்துகொண்ட சாகுல்ஹமீது தனது மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். கடந்த 4 ஆண்டுகளாக தனது மனைவியோடு எவ்வித தொடர்புமின்றி இருந்து வருகிறார். தற்போது தாஹிரா தனது குழந்தையோடு தனது தாய் ஜெஹபர் நாச்சியா அவர்களின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

கடந்த 4 ஆண்டுகளில் குழந்தையின் மருத்துவ சிகிச்சையை சென்னை, மதுரை , தஞ்சை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் எடுத்து வந்துள்ளார். எனினும் குழந்தை பூர்ண நலம் பெறவில்லை. குழந்தைக்கு திடீர் வெட்டு, கை, கால் சோர்வு அடைதல், தொடர் அழுகை உள்ளிட்டவை இருந்து வருகின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கே.எம்.ஏ ஜமால் முகமது, மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது, எஸ்.ஏ இம்தியாஸ், ஜாகிர், முஹம்மது இக்பால் ஆகியோர் குழந்தை வசிக்கும் இல்லத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர்.

அப்போது குழந்தையை பார்வையிட வந்த சமூக ஆர்வலரும், தொடர்ந்து வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவிகளை தானாக முன்வந்து உதவி வரும் எஸ்.ஏ இம்தியாஸ் அகமது தனது பாக்கெட்டில் இருந்த ரூ 2 ஆயிரத்தை குழந்தையின் தாயிடம் வழங்கி உதவினார்.

மருத்துவர் அறிவுரையின் பேரில் தினமும் 3 வேளைக்கு 4 வகை டானிக், 4 வகை மாத்திரைகள் குழந்தைக்கு வழங்கி வருவதாகவும், இதுவரையில் ரூ 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகை செலவாகி உள்ளதாக குழந்தையின் தாய் கண்ணீருடன் நம்மிடம் தெரிவித்தார்.

மூளை செயல்திறன் குறைபாடு கொண்ட இக்குழந்தையின் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்காக இக்குடும்பத்தினர் நம்மிடம் உதவி கோரி உள்ளனர்.

இக்குழந்தைக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக தாஹிரா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள குழந்தையின் பாட்டி ஜெஹபர் நாச்சியா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

நிதி உதவி கோரி குழந்தையின் குடும்பத்தினர் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : JAGAPARNACHIYA
Bank Name : INDIAN BANK
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 6039362055

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9750495157

பரிந்துரை:
கே.எம்.ஏ ஜமால் முகமது,
அஜ்வா நெய்னா
மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது,
எஸ்.ஏ இம்தியாஸ்,
ஜாகிர்,
முஹம்மது இக்பால்
 
7 comments:

 1. இந்த மருத்துவசேவை என்பது ஒரு மகத்தான சேவை, இதை ஒரு குழுவாக இருந்து பலரும் செய்து வருகின்றனர், அந்த வகையில் “நம்ம ஊர் மக்கள் வாங்க பேசலாம்” குரூப்பின் வழியாக இப்படி ஒரு பிரச்சனையை அறிந்தோம், அதற்க்கு உறுதுணையாக இருந்தவர்கள் தம்பி சாகுல் ஹமீது (அஜ்மீர் ஸ்டோர்) மற்றும் தம்பி அஜ்வா நெய்னா (ஜித்தா) மற்றும் ஏனைய சகோதரர்கள்.

  ReplyDelete
  Replies
  1. //ஜ.மு காக்கா அவர்களே
   சகோ.சிங்கம் இக்பால் தானே இந்த தகவலை காமெடி குரூப்பில் அறிவிப்பு அவரை நீங்கள் குறிப்பிடவில்லையே.//

   தம்பி அப்துல் ரஹ்மான், முதலில் நீங்கள் இந்த விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

   இந்த செய்தி முதலில் அஜ்மீர் சாகுல் ஹமீது சார்பாக “நம்ம ஊர் மக்கள் வாங்க” என்ற குரூப்பில்தான் முதலில் வந்தது. மேலும் இதில் தம்பி இக்பாலுடைய பெயரும் போட்டோவும் இடம் பெற்றிருக்குதே.

   இந்தசெய்து எங்களுக்கு சவூதியில் இருந்து வத்து.

   இன்னும் ஒரு செய்தி தெரியுமா? அதாவது, நமதூரில் ஆட்டோவில் விளம்பரம் செய்யும் சகோதரரின் விபத்து செய்தி சவூதியில் இருந்து எனக்கு வந்தது, அதை நான் காமெடி குரூப்பில் போட்டேன். அதன் பிறகுதான் தம்பி இத்ரீஸ் அஹமது, மற்றும் ஏனைய சகோதரர்கள் களத்தில் இறங்கினர்.

   தம்பி நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்.

   நேற்று 18/11/2016 காமெடி குரூப்பில் நீங்கள் பேசியது எல்லாத்தையும் பார்க்கும் பொது,,,,,,

   நீங்களாகவே பேசவில்லை, மாறாக நீங்கள் வேறு நபரால் வன்மையாக தூண்டப்பட்டு பேசி இருக்கின்றீர்கள், மேலும் இந்த அதிரை நியூசில் கருத்தும் பதிவு இட்டுள்ளீர்கள்.

   அதிரை நியூஸ் உங்களுக்கு எவ்வளவு நாட்களாக தெரியும்.

   Delete
 2. ஜ.மு காக்கா அவர்களே
  சகோ.சிங்கம் இக்பால் தானே இந்த தகவலை காமெடி குரூப்பில் அறிவிப்பு அவரை நீங்கள் குறிப்பிடவில்லையே

 3. ஜ.மு காக்கா அவர்களே
  சகோ.சிங்கம் இக்பால் தானே இந்த தகவலை காமெடி குரூப்பில் அறிவிப்பு செய்தார் அவர் பெயரை நீங்கள் குறிப்பிடவில்லையே

  ReplyDelete
 4. ஜ.மு காக்கா அவர்களே
  சகோ.சிங்கம் இக்பால் தானே இந்த தகவலை காமெடி குரூப்பில் அறிவிப்பு அவரை நீங்கள் குறிப்பிடவில்லையே

  ReplyDelete
  Replies
  1. //ஜ.மு காக்கா அவர்களே
   சகோ.சிங்கம் இக்பால் தானே இந்த தகவலை காமெடி குரூப்பில் அறிவிப்பு அவரை நீங்கள் குறிப்பிடவில்லையே.//

   தம்பி அப்துல் ரஹ்மான், முதலில் நீங்கள் இந்த விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

   இந்த செய்தி முதலில் அஜ்மீர் சாகுல் ஹமீது சார்பாக “நம்ம ஊர் மக்கள் வாங்க” என்ற குரூப்பில்தான் முதலில் வந்தது. மேலும் இதில் தம்பி இக்பாலுடைய பெயரும் போட்டோவும் இடம் பெற்றிருக்குதே.

   இந்தசெய்து எங்களுக்கு சவூதியில் இருந்து வத்து.

   இன்னும் ஒரு செய்தி தெரியுமா? அதாவது, நமதூரில் ஆட்டோவில் விளம்பரம் செய்யும் சகோதரரின் விபத்து செய்தி சவூதியில் இருந்து எனக்கு வந்தது, அதை நான் காமெடி குரூப்பில் போட்டேன். அதன் பிறகுதான் தம்பி இத்ரீஸ் அஹமது, மற்றும் ஏனைய சகோதரர்கள் களத்தில் இறங்கினர்.

   தம்பி நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்.

   நேற்று 18/11/2016 காமெடி குரூப்பில் நீங்கள் பேசியது எல்லாத்தையும் பார்க்கும் பொது,,,,,,

   நீங்களாகவே பேசவில்லை, மாறாக நீங்கள் வேறு நபரால் வன்மையாக தூண்டப்பட்டு பேசி இருக்கின்றீர்கள், மேலும் இந்த அதிரை நியூசில் கருத்தும் பதிவு இட்டுள்ளீர்கள்.

   அதிரை நியூஸ் உங்களுக்கு எவ்வளவு நாட்களாக தெரியும்.

   Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...