Pages

Saturday, November 19, 2016

உம்மல் குவைன் போக்குவரத்து விதிமீறல் அபராதம் 50% தள்ளுபடி !

அதிரை நியூஸ்: நவ-19
எதிர்வரும் 45 வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு உம்மல் குவைன் போக்குவரத்துத்துறை போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை 50 சதவிகிதம் தள்ளுபடியில் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

2016 நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும் இந்த சிறப்பு சலுகை காலத்தில் வாகனப்பதிவு தொடர்பான அபராதங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் ஆகியவற்றை செலுத்தலாம், இவை அனைத்தும் நவம்பர் 20 ஆம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து விதிமீறல் குற்றங்களாக இருக்க வேண்டும்.

2016 நவம்பர் 20 ஆம் தேதிக்குப் பின் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை பொருத்தவரை வாகனத்தின் சொந்தக்காரர்கள் உம்மல் குவைன் போக்குவரத்துத் துறைக்கு நேரில் விஜயம் செய்தால் மட்டுமே அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை உம்மல் குவைனில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஆனால் பிற எமிரேட்டுக்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த அபராதங்களை உம்மல் குவைன் போக்குவரத்து துறையின் சேவை மையங்களிலோ அல்லது உள்துறை அமைச்சகத்தின் ஸ்மார்ட் ஆப் வழியாகவோ செலுத்தலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...