Pages

Thursday, November 10, 2016

அதிரையில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற பொதுமக்கள் ஆர்வம்: வங்கிகளில் அலைமோதும் கூட்டம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், நவ-10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மத்திய வங்கிகள் கனரா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகியன உள்ளன. இங்கு அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நேற்று பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பணத்தை பறிமாற்றிக்கொள்ளலாம் என கூறப்பட்டது.

இதையடுத்து இன்று  காலை முதல் அதிரையின் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் நிரம்பியதால் வங்கிக்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து பழைய நோட்டுகளை மாற்ற வந்த வங்கி வாடிக்கையாளர் ரபீக் கூறுகையில்; இன்று முதல் பழைய 500. 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால். இன்று காலை 9 மணிக்கே வங்கி வாசலுக்கு வந்துவிட்டேன். வங்கி திறந்தவுடன் டோக்கனை எடுத்துக்கொண்டேன். கூட்டம் அதிகமானதால் அடுத்து சில நிமிடங்களில் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கு 200 டோக்கன் வரை வழங்கப்பட்டன. கூட்டம் குறைந்த பின்னர் மீண்டும் டோக்கன் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இன்று முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற வந்த எனக்கு ஏமாற்றம் மிஞ்சின. நான் கொடுத்த பழைய ரூ 500 நோட்டுகளை வாங்கிக்கொண்டு ரூ 100 நோட்டுகளை மாற்றித்தந்தனர். புதிய நோட்டுகளை தரவில்லை. வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும், வைப்பு தொகை செலுத்தவும் அனுமதிக்கின்றனர்' என்றார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...